இந்தியா

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு 4.23 லட்சம் இலவச டிக்கெட்- 9 இடங்களில் வழங்க ஏற்பாடு

Published On 2023-11-21 10:51 IST   |   Update On 2023-11-21 12:30:00 IST
  • வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது.
  • ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியான 1 மணி நேரத்திற்குள் தீர்ந்து விடுகின்றன. இதில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

திருப்பதி:

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது :-

வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 23-ந் தேதி முதல் 1-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

பக்தர்கள் சிரமம் இன்றி விரைவாக தரிசனம் செய்வதற்காக 2.25 லட்சம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டன.

சாதாரண பக்தர்களும் வைகுண்ட வாசல் வழியாக சாமியை தரிசிக்க டிசம்பர் மாதம் 22-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை 10 நாட்களுக்கு 4 லட்சத்து 23 ஆயிரத்து 500 இலவச தரிசன டிக்கெட் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 மையங்களில் வழங்கப்பட உள்ளது.

காலை 6 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நித்திய அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் வைகுண்ட ஏகாதசி நாட்களில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 7 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட உள்ளது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த கூடுதல் போலீசார் மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார், தன்னார்வலர்களை பணியில் ஈடுபடுத்த உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பதியில் நேற்று 67,198 பேர் தரிசனம் செய்தனர். 22,452 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.19 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியான 1 மணி நேரத்திற்குள் தீர்ந்து விடுகின்றன. இதில் முறைகேடு நடப்பதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

பக்தர்களுக்கு எளிதில் ஆன்லைன் டிக்கெட் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News