இந்தியா

34 மனித வெடிகுண்டுகள் தயார் - விநாயகர் ஊர்வலத்தில் மக்களை கொல்ல சதி?.. மும்பையில் பரபரப்பு

Published On 2025-09-05 23:04 IST   |   Update On 2025-09-05 23:04:00 IST
  • 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், மும்பை நடுங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • விநாயகர் சிலைகளை 10-வது நாளான நாளை (செப்டம்பர் 6) ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது.

400 கிலோகிராம் RDX உடன் 34 மனித வெடிகுண்டுகள் நகரில் தயாராக இருப்பதாக மும்பை போக்குவரத்து காவல்துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு வந்த மிரட்டல் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லஷ்கர்-இ-ஜிஹாத் அமைப்பு என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்த மிரட்டல் செய்தியில், 34 தற்கொலை குண்டுதாரிகள் 1 கோடி மக்களைக் கொல்வார்கள் என்றும், மும்பை நடுங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், 14 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்த மிரட்டலைத் தொடர்ந்து மும்பை நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி நாளில் வைத்து வணங்கப்பட்ட விநாயகர் சிலைகளை 10-வது நாளான நாளை (செப்டம்பர் 6) ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்படும் நிகழ்வு நடைபெற உள்ளது. இந்த சூழலில் வந்த இந்த மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News