இந்தியா

டெல்லி கட்டிட விபத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

Published On 2025-04-19 22:39 IST   |   Update On 2025-04-19 23:12:00 IST
  • இன்று அதிகாலை 20 ஆண்டு பழமையான 4 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
  • இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அதில் 3 3 குழந்தைகளும் அடங்கும்.

புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் முஸ்தபாபாத் பகுதியில் 4 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து அவர்களை மீட்கும் பணி நடந்தது.

முதல் கட்டமாக கட்டிட விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. மேலும், 14 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் 12 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.

இந்நிலையில், டெல்லி கட்டிட விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3 குழந்தைகளும் அடங்கும். மேலும் 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்களில் கட்டிடத்தின் வீட்டு உரிமையாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டெல்லி முதல் மந்திரி ரேகா குப்தா தனது இரங்கலைத் தெரிவித்துடன், சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு கட்டிட விபத்தில் பலியானோருக்கு இரங்கல் தெரிவித்தார். இந்த கட்டிட விபத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததுடன், பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்தார்.

Tags:    

Similar News