இந்தியா
புதிய பாராளுமன்ற வரைபடம்

புதிய பாராளுமன்ற கட்டிடம் நவம்பர் 26-ந்தேதி திறப்பு?

Published On 2022-06-02 12:56 IST   |   Update On 2022-06-02 15:26:00 IST
அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ந்தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதில் எம்.பி.க்கள், பார்வையாளர்களுக்கு நவீன வசதிகள் இடம்பெறுகின்றன. மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்கு, உணவு கூடங்கள் இதில் உள்ளன.

இதற்கான கட்டுமானத்தை இந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ந் தேதி முதல் புதிய பாராளுமன்ற கட்டிடம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News