இந்தியா
பிரதமர் நரேந்திர மோடியுடன் குத்துச்சண்டை வீராங்கணை

உலக குத்துச்சண்டை சாம்பியன் நிகத் ஜரீன் உள்ளிட்ட வீராங்கணைகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2022-06-01 21:46 IST   |   Update On 2022-06-01 21:46:00 IST
மனிஷா மற்றும் அறிமுக வீராங்கனை பர்வீன் முறையே 57 கிலோ மற்றும் 63 கிலோ பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்தியாவின் குத்துச்சண்டை உலக சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் சமீபத்தில் இஸ்தான்புல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சக வீரர்களான மனிஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

ப்ளைவெயில் (52 கிலோ) பிரிவில் நிகத் தங்கம் வென்றார். மனிஷா மற்றும் அறிமுக வீராங்கனை பர்வீன் முறையே 57 கிலோ மற்றும் 63 கிலோ பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

வீராங்கணைகள் பிரதமர் மோடியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர், பிரதமர் மோடி வீராங்கணைகள்  அணிந்திருந்த டி சர்ட்டுகளின் கை பகுதியில் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தார்.  

இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது:-

பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவை பெருமைப்படுத்திய குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன், மனிஷா மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி. விளையாட்டு மற்றும் அதைத் தாண்டிய வாழ்க்கையின் மீதான ஆர்வம் உள்பட அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் குறித்து நாங்கள் சிறப்பாக உரையாடினோம். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வீரர்களான நிகத் ஜரீன், மனிஷா ஆகியோர் தங்களது டுவிட்டர் பக்கத்தில் "எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மரியாதைக்குரியது. உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி" என்று குறிப்பிட்டிள்ளனர்.

இதையும் படியுங்கள்.. 133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு
Tags:    

Similar News