இந்தியா
பிரதமருடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்

133 கோடி மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தார் பிரதமர் மோடி- உ.பி முதல்வர் பாராட்டு

Published On 2022-06-01 12:02 GMT   |   Update On 2022-06-01 12:02 GMT
பாஜக ஆட்சிக்கு முன்பு நாட்டில் பிரிவினைவாதம், தீவிவாதம் மற்றும் பயங்கரவாதம் அதிகரித்தது.
பிரதமர் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, பாஜக மாநிலத் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்று பேசிய உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், எல்லோருடைய வளர்ச்சிக்கும் எல்லோருடைய உழைப்பும் உதவும் என்ற முழக்கத்துடன் அவர், பாஜக தலைமையிலான அரசு 2014-க்கும் பிறகு நாட்டின் நிலைமையை மாற்றியது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-

2014ம் ஆண்டுக்கு முன்பு மக்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை இருந்தது. பிரிவினைவாதம், தீவிவாதம் மற்றும் பயங்கரவாதம் அதிகரித்தது. அராஜகம் அதன் உச்சத்தில் இருந்தது. ஊழல் நிறுவனமாகி இருந்தது.

2014 மே மாதம் மோடி ஆட்சிக்கு வந்ததும், கிராம மக்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டு, நாட்டின் 133 கோடி மக்களின் வாழ்க்கை மாறியுள்ளது.

கடந்த கால அரசாங்கங்கள் வறுமையை ஒழிப்பதற்காக கோஷங்களை மட்டுமே கொடுத்தன. ஆனால் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான எதையும் களத்தில் செய்யவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. 7 முறை துப்பாக்கியால் சுட்ட பிறகும் மீண்டு யுபிஎஸ்சியில் தேர்ச்சி பெற்ற அதிகாரி
Tags:    

Similar News