இந்தியா
வான்கடே

ஆர்யன் கான் வழக்கு: சர்ச்சை அதிகாரி வான்கடே சென்னைக்கு மாற்றம்

Published On 2022-05-31 01:55 GMT   |   Update On 2022-05-31 01:55 GMT
மும்பை போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார்.
புதுடெல்லி :

மராட்டிய மாநிலத்தில் கடந்த ஆண்டு, சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேரை என்.சி.பி., எனப்படும் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

அப்போது, மும்பை மண்டல என்.சி.பி., இயக்குனராக இருந்த சமீர் வான்கடே, இந்த கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் ஆர்யன் கானை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து மும்பை போதைப்பொருள் வழக்கில் இருந்து சமீர் வான்கடே நீக்கப்பட்டு, மும்பையில் உள்ள பகுப்பாய்வு மற்றும் இடர் மேலாண்மை இயக்குநரகத்திற்கு மாற்றப்பட்டார்.

இந்த சூழ்நிலையில் போதை மருந்து வழக்கில் சிக்கிய ஆர்யன் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுதலையானார். இந்நிலையில் மும்பையிலிருந்து சென்னையில் உள்ள வரி சேவை இயக்குநரகத்திற்கு சமீர் வான்கடே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News