இந்தியா
தேசிய தலைவர் ஜே.பி.நட்டா

அரசியல் நாகரீகத்தை மாற்றிக் காட்டியவர் பிரதமர் மோடி - ஜே.பி.நட்டா புகழாரம்

Published On 2022-05-30 17:45 IST   |   Update On 2022-05-30 17:45:00 IST
2024- ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது மேற்கு வங்காளத்தில் பாஜகவை வலுப்படுத்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஜூன் முதல் வாரத்தில் பயணம் மேற்கொள்கிறார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி பிரதமராகி 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையடுத்து, பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கடந்த 8 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி இந்திய அரசியல் நாகரீகத்தை மாற்றிக் காட்டியுள்ளார்.

சேவை, நல்லாட்சி, ஏழை நலன் இதுவே மோடி அரசின் செயல்பாடு. முன்பு இருந்த ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் காகித அளவிலே இருந்தன. தற்போதைய ஆட்சியில் அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மாபெரும் சக்தியாக திகழ்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். மோடி அரசு பிரச்சினைகளை தீர்த்து வருகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News