இந்தியா
அணை மீது ஏறும் வாலிபர்

அணையில் ஏறும்போது தடுமாறி விழுந்த வாலிபர் - பதறவைக்கும் வீடியோ

Update: 2022-05-23 10:05 GMT
வாலிபர் ஒருவர் கர்நாடகாவில் உள்ள ஸ்ரீநிவாச சாகர் அணையில் ஏற முயன்ற போது தடுமாறி கீழே விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூர்:

கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபூரில் ஸ்ரீநிவாச சாகர் அணை உள்ளது. இந்த அணையானது 50 அடி உயரம் கொண்டது. 

கோடைகாலம்  என்பதால் ஸ்ரீநிவாச சாகர் அணையில் குளிப்பதற்காக மக்களின் அதிகமாக குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், 20 வயதான வாலிபர் ஒருவர் அணையின் சுவர் மீது ஏறி சாகசத்தில் ஈடுபட முயன்றுள்ளார். இதனை அங்குள்ள பலரும் வீடியோ எடுத்துள்ளனர். 

அணையில் 25 அடி உயரம் வரை ஏறிய வாலிபர் அதற்கு மேல் ஏற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் வலைபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

காயமடைந்த வாலிபர் பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் எச்சரிக்கையும் மீறி  அணையின் சுவரில் ஏற முயன்றதால் வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Tags:    

Similar News