இந்தியா
சட்டசபை வாயிற்கதவில் கட்டப்பட்ட காலிஸ்தான் கொடிகள்

சட்டசபை வாசலில் காலிஸ்தான் கொடிகள்- இமாச்சல பிரதேசத்தில் பரபரப்பு

Published On 2022-05-08 11:12 IST   |   Update On 2022-05-08 11:12:00 IST
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகள், காலிஸ்தான் கொடிகளை கட்டியிருக்கலாம் என போலீஸ் சூப்பிரெண்டு குஷால் சர்மா தெரிவித்தார்.
தரம்சாலா:

தரம்சாலாவில் உள்ள இமாச்சல பிரதேச சட்டசபையின் பிரதான வாயிற்கதவுகள் மற்றும் சுற்றுச்சுவரில் மர்ம நபர்கள் காலிஸ்தான் கொடிகளை கட்டியுள்ளனர். பாதுகாப்பு நிறைந்த அப்பகுதியில் பிரிவினைவாத இயக்கத்தின் கொடிகள் கட்டப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நேற்று நள்ளிரவு அல்லது இன்று அதிகாலையில் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. காலிஸ்தான் கொடிகளைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அவற்றை அப்புறப்படுத்தினர். 


இது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வந்திருந்த சில சுற்றுலாப் பயணிகளின் செயலாக இருக்கலாம் என்றும், இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளதாகவும் போலீஸ் சூப்பிரெண்டு குஷால் சர்மா தெரிவித்தார்.

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு கோரி காலிஸ்தான் இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News