இந்தியா
தேர்வு எழுதிய மாணவி தலையில் விழுந்த மின்விசிறி

தேர்வு எழுதிய மாணவி தலையில் விழுந்த மின்விசிறி- அரசு பள்ளியில் விபரீதம்

Published On 2022-05-04 13:14 IST   |   Update On 2022-05-04 14:16:00 IST
ஆந்திராவில் தேர்வு எழுதிய மாணவி தலையில் மின்விசிறி விழுந்ததைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்யசாய் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நேற்று முன்தினம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்துகொண்டு இருந்தது.

அப்போது பள்ளி வகுப்பறையில் ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவியின் தலையில் விழுந்தது.

இதனால் மாணவியின் தலையில் காயம் ஏற்பட்டு வலியால் அலறி துடித்தார்.மாணவியின் தலையில் மின்விசிறி விழுந்ததைக் கண்ட ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவரை அழைத்து வந்து பள்ளியிலேயே மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

தேர்வு தொடங்குவதற்கு 2 நாட்கள் முன்பு மாணவர்கள் தேர்வு எழுதும் அறைகள் பராமரிப்பு பணிகள் நடந்தது. துரதிஷ்டவசமாக மின்விசிறி கழன்று மாணவியின் தலையில் விழுந்துள்ளது என தெரிவித்தார்.

இந்த சம்பவம் மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Similar News