இந்தியா
அகமதாபாத் வந்து சேர்ந்த பிரதமர் மோடி

மூன்று நாள் அரசுமுறை பயணம்- குஜராத் வந்தார் பிரதமர் மோடி

Published On 2022-04-18 12:49 GMT   |   Update On 2022-04-18 12:49 GMT
தியோடரில் உள்ள பனாஸ் பால் பண்ணையில் நாளை பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்:

பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக இன்று குஜராத்திற்கு வந்தார். அகமதாபாத் விமான நிலையம் வந்து சேர்ந்த அவருக்கு அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவருக்கு வழிநெடுக பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

20ம் தேதி வரை குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, ரூ.22,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். காந்திநகரில் உள்ள பள்ளிகளுக்கான கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் இன்று பார்வையிடுகிறார். 

நாளை தியோடரில் உள்ள பனாஸ் பால் பண்ணையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். 20 ஆம் தேதி காந்திநகரில் உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புத்தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News