இந்தியா
நிதிஷ் குமார்

மது குடிப்பவர்கள் மகாபாவிகள்: பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் சொல்கிறார்

Published On 2022-04-01 07:36 GMT   |   Update On 2022-04-01 12:01 GMT
மகாத்மா காந்தி மது அருந்தக் கூடாது என்பதை தமது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார். மகாத்மாவின் இந்த கொள்கையை உணராதவர்கள் நிச்சயம் இந்தியர்களாக இருக்க முடியாது என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் சட்டசபையில் பேசும்போது கூறியதாவது:-

மகாத்மா காந்தி மது அருந்தக் கூடாது என்பதை தமது வாழ்நாள் முழுவதும் வலியுறுத்தினார். மகாத்மாவின் இந்த கொள்கையை உணராதவர்கள் நிச்சயம் இந்தியர்களாக இருக்க முடியாது. மது குடிப்பது பாவம் செய்வதற்கு சமம். மது குடிப்பவர்களை நான் மகாபாவிகள் என்றுதான் சொல்வேன்.

மது குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு சில அரசுகள் உதவுகின்றன. ஆனால் அத்தகைய உதவி எதையும் நமது அரசு செய்வதில்லை. பீகாரில் மதுவிலக்கு மேலும் கடுமையாக்கப்படும். மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் பீகாரில் ஒரு கோடியே 64 லட்சம் பேர் மது அருந்துவதை கைவிட்டு உள்ளனர்.

மற்ற மாநிலங்கள் இதைப்பார்த்து ஆச்சரியப்படுகின்றன. அந்த மாநிலங்கள் குழுக்களை அனுப்பி பீகாரில் எப்படி மதுவிலக்கு அமல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்ய வருகின்றன. அந்த அளவுக்கு பீகாரில் மதுவிலக்கு மிக நேர்த்தியாக கடைபிடிக்கப்படுகிறது.

இவ்வாறு நிதிஷ்குமார் கூறியுள்ளார்.

Tags:    

Similar News