இந்தியா
ஏவுகணை சோதனை

வான் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்தது இந்திய ராணுவம்

Published On 2022-03-27 10:44 GMT   |   Update On 2022-03-27 10:44 GMT
வான் எதிர்ப்பு ஏவுகணை தொலைவில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கியதாக டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:

தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும், வான் எதிர்ப்பு ஏவுகணையை இந்திய ராணுவம் இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. 

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை, வான் இலக்கை துல்லியமாக அழித்ததாக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தெரிவித்துள்ளது. 

இந்த ஏவுகணை, இந்திய ராணுவத்தில் ஒரு அங்கமாக உள்ளது என்றும், சோதனையின் போது, தொலைவில் இருந்த இலக்கை நேரடியாக தாக்கியதாகவும் டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News