இந்தியா
2018 முதல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பயங்கரவாத தாக்குதல் குறைந்துள்ளது - மக்களவையில் மந்திரி தகவல்
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுடெல்லி:
பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து மக்களவையில் எம்.பி. ரஞ்சன்பென் தனஞ்செய் பட் இன்று கேள்வி எழுப்பினார். அவரது கேள்விக்கு உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதன் விவரம் வருமாறு:
கடந்த 2018-ம் ஆண்டு முதல் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி வழியாக காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல் குறைந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 366 பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தளங்களில் பயங்கரவாதிகள் காத்திருக்கின்றனர்.
சர்வதேச மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பல அடுக்கு பாதுகாப்பு, வேலி அமைத்தல், கண்காணிப்பை அதிகப்படுத்துதல், பாதுகாப்பு படையினருக்கு நவீன ஆயுதங்களை வழங்கி ஊடுருவலை மத்திய அரசு கட்டுப்படுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்...குருவாயூர் கோவிலுக்கு பக்தர்கள் முன்பதிவு இன்றி செல்ல அனுமதி