இந்தியா
சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்த அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ், அசம் கான் ஆகியோர் எம்.பி. பதவியில் இருந்து விலகல்

Update: 2022-03-22 10:28 GMT
உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் கார்ஹால் தொகுதியில் போட்டியிட்ட அகிலேஷ் யாதவ் 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
புதுடெல்லி:

சமீபத்தில் 7 கட்டங்களாக நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவ் கார்ஹால் தொகுதியில் போட்டியிட்டார். அவர் 67,504 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனைத்தொடர்ந்து சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக செயல்பட அவர் முடிவு செய்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் அசம்கார் மக்களவை தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து இன்று விலகினார். இதையடுத்து, சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து தனது பதவி விலகல் பற்றி முறைப்படி தெரிவித்தார்.

இதேபோல், சமாஜ்வாடி கட்சி தலைவர் அசம் கான் ராம்பூர் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவரும் தனது மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

Tags:    

Similar News