இந்தியா
தீ விபத்தை பார்வையிட்ட கெஜ்ரிவால்

தீ விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு ஆறுதல் கூறினார் முதல் மந்திரி கெஜ்ரிவால்

Published On 2022-03-12 09:09 GMT   |   Update On 2022-03-12 11:23 GMT
டெல்லி தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லி கோகுல்புரி பகுதியில்  உள்ள குடிசைப் பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடிசை தீப்பற்றி எரிவதை அறிந்து அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். இதில் சுமார் 30 குடிசைகள் கொளுந்துவிட்டு எரிந்தன.

தகவலறிந்த போலீசார் 30 தீயணைப்பு வாகனத்துடன் அங்கு விரைந்தனர். தீவிர முயற்சிக்குப் பின் அதிகாலையில் சுமார் 4 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மீட்புப் பணியில் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்த 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீ விபத்து நடந்த கோகுல்புரி பகுதிக்கு டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News