இந்தியா
நாடு திரும்பிய இந்தியர்கள்

உக்ரைனில் இருந்து இதுவரை 15,920 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர் - மத்திய அரசு

Published On 2022-03-06 18:12 GMT   |   Update On 2022-03-06 18:12 GMT
இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் மூலம் உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
புதுடெல்லி:

உக்ரைன் மீது ரஷியா 10 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. போர் மூண்டதை அடுத்து, அங்கு வசித்து வரும் இந்திய மாணவர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது.

உக்ரைன் வான்பகுதி மூடப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் ருமேனியா, ஹங்கேரி போன்ற அண்டை நாடுகளுக்கு வெளியேற்றப்பட்டு, அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலம் உக்ரைனில் அண்டை நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகளில் ஏர் இந்தியா, இண்டிகோ போன்ற தனியார் பயணிகள் விமானங்களும், விமானப்படை விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், உக்ரைனில் இருந்து இதுவரை மொத்தம் 76 விமானங்களில் 15,920 இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

Similar News