search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    குற்றங்களைத் தடுக்க 7 மாவட்டங்களில் இணைய சேவைக்கு தடை- மேற்கு வங்காளம் அறிவிப்பு

    மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், உத்தர் தினாஜ்பூர், கூச்பெஹார், ஜல்பைகுரி, பிர்பூம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது.
    மேற்கு வங்கத்தில் சட்ட விரோத செயல்களை தவிர்க்கும் வகையில் ஏழு மாவட்டங்களில் 8 நாட்களுக்கு இணையதள சேவை நிறுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து, உள்துறை மற்றும் மலைவாழ்வுத் துறை கூடுதல் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இணையப் பரிமாற்றம் மற்றும் குரல் வழி இணையத் தொலைபேசி மூலம் சில பகுதிகளில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறலாம் என உளவுத்துறை அரசுக்கு தகவல் தெரிவித்தது. இதையடுத்து, மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத், உத்தர் தினாஜ்பூர், கூச்பெஹார், ஜல்பைகுரி, பிர்பூம் மற்றும் டார்ஜிலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் இணைய சேவைக்கு தடை விதிக்கப்படுகிறது.

    தடை உத்தரவு நாளை முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, மார்ச் 7 முதல் 9-ம் தேதி வரை, மார்ச் 11 மற்றும் 12-ம் தேதிகளில், மார்ச் 15 மற்றும் 16-ம் தேதிகளில் காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.   செல்போன் அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் செய்தித்தாள்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. மருத்துவ கல்லூரி விடுதியில் மாணவர்களை மொட்டை அடித்து கைகளை கட்டி நடக்குமாறு ராகிங்?
    Next Story
    ×