இந்தியா
விமானப்படை விமானம்

ஆபரேஷன் கங்கா திட்டம் - இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானம்

Published On 2022-03-01 08:43 GMT   |   Update On 2022-03-01 10:02 GMT
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று நேரில் சந்தித்த பிரதமர் மோடி, உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, மாணவர்கள் மீட்பு பணி குறித்து விளக்கம் அளித்தார்.
புதுடெல்லி:

உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போர் இன்று 6வது நாளாக நீடித்து வருகிறது. சர்வதேச அளவில் பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன. அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவு, படைகள் குவிப்பு, எல்லைகளை முற்றுகையிடுதல் போன்ற செயல்களில் ரஷியா இறங்கி உள்ளது.

கீவ் நகரை ரஷிய ராணுவ படைகள் நெருங்கியுள்ளன. உக்ரைன் எல்லையையொட்டி கூடுதல் தரைப்படைகள், ஹெலிகாப்டர் படைப்பிரிவுகள் குவிக்கப்பட்டுள்ள புகைப்படங்கள் வெளியாகின.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மக்கள் மற்றும் மாணவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.

ஆபரேஷன் கங்கா மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4 மத்திய மந்திரிகள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

இந்நிலையில், உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை விமானத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் கங்கா திட்டத்தில் இன்று முதல் இந்திய விமானப் படையின் சி-17 ரக விமானங்கள் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
Tags:    

Similar News