இந்தியா
துப்பாக்கி சூடு

மணிப்பூரில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு

Published On 2022-02-27 10:26 GMT   |   Update On 2022-02-27 10:30 GMT
வேட்பாளர் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவரது அதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இம்பால்:

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. 

இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ஷேத்ரிகாவ் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வாகங்பாம் ரோகித் சிங், நேற்று பிரசாரத்தை முடித்துக்கொண்டு கட்சியினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நள்ளிரவில் வீடு திரும்பியபோது, அவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த ரோகித் சிங் இம்பாலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.



இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது அதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். தேர்தலில் ரோகித் சிங் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அரசியல் போட்டி காரணமாக அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அவரது தாயார் கூறி உள்ளார்.

ரோகித் சிங் போட்டியிடும் ஷேத்ரிகாவ் தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மணிப்பூரில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான வன்முறை நடைபெறுகிறது.
Tags:    

Similar News