இந்தியா
பிரதமர் மோடி

ராணி எலிசபெத் கொரோனாவில் இருந்து விரைவில் குணமடைய பிரதமர் மோடி பிரார்த்தனை

Published On 2022-02-21 04:06 IST   |   Update On 2022-02-21 04:06:00 IST
கடந்த வாரம் இங்கிலாந்து இளவரசர் சார்லசின் மனைவி கமிலாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார் என பக்கிங்காம் அரண்மனை நேற்று உறுதிப்படுத்தி உள்ளது. அவருக்கு லேசான அறிகுறிகள் காணப்படுகின்றன. வரும் வாரத்தில் அவர் வின்ட்சரில் தங்கியிருந்து பணிகளை செய்வார் என பக்கிங்காம் அரண்மனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும், மருத்துவ அறிவுரைகளை தொடர்ந்து பெறும் ராணி எலிசபெத், முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் விரைவில் குணமடையவும், பூரண நலம்பெற வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Similar News