இந்தியா
நாங்கள் பள்ளிகளை கட்டவில்லை தேசபக்தர்களை உருவாக்க தொழிற்சாலைகளை கட்டுகிறோம்- கெஜ்ரிவால்
நாங்கள் பள்ளிகளை கட்டவில்லை, தேசபக்தர்களை உருவாக்க தொழிற்சாலைகளை அமைக்கிறோம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
டெல்லியில் உள்ள சுமார் 240 அரசுப் பள்ளிகளில் 12,430 புதிய ஸ்மார்ட் வகுப்புகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திறந்து வைத்தார். இதன் தொடக்க விழாவில் துணை முதல்வரும் கல்வி அமைச்சருமான மணீஷ் சிசோடியா, டெல்லி உள்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
ஒவ்வொரு மாணவரும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பது பாபா சாஹாப் டாக்டர் பிஆர் அம்பேத்கர் அவர்களின் கனவு. சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், மற்ற மாநிலங்களில் அவரது கனவு நனவாகவில்லை. டெல்லியிலாவது அவரது கனவுகள் நனவாகத் தொடங்கியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
டெல்லி அரசு கடந்த 7 ஆண்டுகளில் மொத்தம் 20,000 வகுப்பறைகளை கட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து கூட 20,000 வகுப்பறைகளை கட்ட முடியவில்லை.
தலைவர்கள் பள்ளிகளைத் தவிர எதற்கும் பயப்படுவதில்லை. நல்ல பள்ளிகள் கட்டினால் ஜாதி, மதத்தின் பெயரால் தலைவர்களுக்கு ஓட்டு கிடைக்காது. இந்த பள்ளிகள் உறுதியான தேசபக்தர்களை உருவாக்கும். நாங்கள் பள்ளிகளை கட்டவில்லை, தேசபக்தர்களை உருவாக்க தொழிற்சாலைகளை அமைக்கிறோம்.
கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பெரிய தலைவர்கள், கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி என்று கூறி வருவது எனக்கு சிரிப்பை வரவழைத்தது. பயங்கரவாதி என்று சொல்லும் நபர் இன்று 12,430 வகுப்பறைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இதையும் படியுங்கள்.. கழுதையை திருடியதாக மாணவர் தலைவர் கைது - சந்திரசேகர ராவை அவமதித்ததால் போலீஸ் நடவடிக்கை