இந்தியா
அரவிந்த் கெஜ்ரிவால், சரண்ஜித் சிங் சன்னி

அவர் என்னை காலா என்று அழைக்கிறார்- சரண்ஜித் சிங் சன்னி குறித்து கெஜ்ரிவால் புகார்

Published On 2022-02-17 04:46 IST   |   Update On 2022-02-17 13:16:00 IST
உத்தர பிரதேசம்,பீகாரைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான கருத்துகளுக்காக பஞ்சாப் முதலமைச்சரை,டெல்லி முதலமைச்சர் கடுமையாக சாடியுள்ளார்.
மொஹாலி:

பஞ்சாப் தேர்தல் பிரச்சாரத்தின் போது கெஜ்ரிவால் குறித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதனால் ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மொஹாலியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளதாவது:

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து மக்கள் பஞ்சாப் மாநிலத்திற்கு வருவதைத் தடுக்குமாறு அவர் ( பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி) வேண்டுகோள் விடுக்கிறார். அவர் என்னை காலா (கருப்பு) என்று அழைக்கிறார். 

அவரது கருத்துகள் உண்மையில் வெட்கக் கேடானது. எந்தவொரு தனி நபரையும் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைத்து வெளியிடப்பட்ட கருத்துகளை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Similar News