இந்தியா
சந்திரசேகரராவ், மோடி

பிரதமர் மோடி நிகழ்ச்சியை புறக்கணிக்க தெலுங்கானா முதலமைச்சர் முடிவு

Published On 2022-02-04 22:26 GMT   |   Update On 2022-02-04 22:35 GMT
ஐதராபாத் வரும் பிரதமரை வரவேற்க அமைச்சர் ஒருவரை, கே.சி.சந்திரசேகரராவ் நியமித்துள்ளார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இன்று நடைபெறும் இரண்டு நிகழச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். படன்சேருவில் உள்ள சர்வதேச பயிர் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50 வது ஆண்டு விழாவை அவர் தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை புறக்கணிக்க தெலுங்கானா முதலமைச்சர் கே.சி.சந்திரசேகரராவ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் மோடியை வரவேற்கவும், தெலுங்கானா மாநிலம் சார்பில் பிரதமரின் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தெலுங்கானா கால்நடை பராமரிப்பு, மீன்வளம், பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீனிவாஸ் யாதவ்வை, சந்திரசேகர ராவ் நியமித்துள்ளார். 

கடந்த 2020 ஆண்டு பிரதமர் மோடி பங்கேற்ற பாரத் பயோடெக் நிறுவன நிகழ்ச்சியை  சந்திரசேகரராவ் புறக்கணித்தார்.. ஐதராபாத் மாநகராட்சி தேர்தலின் போது பா.ஜ.க., டி.ஆர்.எஸ். தலைவர்கள் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது. 

பிரதமர் மோடி பல்வேறு மாநில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அந்த மாநிலத்திற்கு உரிய கலாச்சார உடை அணிவதை கேலி செய்து சந்திரசேகர ராவ் கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை அவர் தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கு தெலுங்கானா பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News