இந்தியா
நிர்மலா சீதாராமன்

சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023ம் ஆண்டு வரை நீட்டிப்பு- நிர்மலா சீதாராமன்

Published On 2022-02-01 06:05 GMT   |   Update On 2022-02-01 06:05 GMT
‘ஒன் ஸ்டேசன், ஒன் பிராடக்ட்’ திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும் என நிர்மலா சீதாராமன் கூறினார்.
புது டெல்லி:

மத்திய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்கள் குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசி வருவதாவது:-

சிறுகுறு தொழில்களுக்கான அவசர கடன் உறுதி திட்டம் மார்ச் 2023-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்படுகிறது.

நாடு  முழுவதும் ரசாயனமற்ற இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும்.

நாடு முழுவதும் 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும். ‘ஒன் ஸ்டேசன், ஒன் பிராடக்ட்’ திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
Tags:    

Similar News