இந்தியா
சாலைகளை சோதனையிடும் எம்.எல்.ஏ

தரமற்ற சாலைகளை போட்டால் தூக்கில் தொங்குவேன்- அதிகாரிகளை மிரட்டிய எம்.எல்.ஏ

Published On 2022-01-30 21:32 IST   |   Update On 2022-01-30 21:32:00 IST
பகுஜான் சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ சஞ்சு சிங் குஷ்வாஹா தனது தொகுதி சாலைகளை ஆய்வு செய்தார்.
போபால்:

ஒழுங்காக சாலை போடவில்லை என்றால் தூக்கில் தொங்குவேன் என அதிகாரிகளை மிரட்டிய எம்.எல்.ஏவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் பிண்ட் தொகுதியை சேர்ந்த பகுஜன் சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ. சஞ்சு சிங் குஷ்வாஹா. இவரது தொகுதியில் சாலைகள் தரமற்ற முறையில் இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து அவரது தொகுதியில் போடப்பட்டிருந்த தார் சாலையை சஞ்சு சிங் ஆய்வு செய்தார்.

அப்போது தார் சாலை அடியோடு பெயர்ந்து வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த சஞ்சு சிங் குஷ்வாஹா சாலை பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும், இல்லையென்றால் உயரமான கட்டிடத்தில் தூக்கு மாட்டி தொங்கிவிடுவேன் என்றும் அரசு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

Similar News