இந்தியா
பிரதமர் மோடி

திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி விரிவாக விளக்கியுள்ளார்: பிரதமர் மோடி

Published On 2021-12-16 13:18 IST   |   Update On 2021-12-16 16:40:00 IST
குஜராத்தில் நடைபெற்று வரும் வேளாண் உச்சி மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்ற பிரதமர், திருக்குறளை குறிப்பிட்டுள்ளார்.
குஜராத்தில்  வேளாண் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

குஜராத் ஆளுநர் இயற்கை வேளாண்மை குறித்து எளிய முறையில் விளக்கினார். மாநாட்டில் இயற்கை வேளாண்மை குறித்து பல விஷயங்கள் பேசப்பட்டன. விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் பல நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டன. உணவு பதப்படுத்துதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. குறைந்த பட்ச ஆதார விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, வேளாண்மையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும். குஜராத் அரசின் வேளாண் திட்டங்கள் நாட்டிற்கே வழிகாட்டுகின்றன. தமிழ்நாட்டின் திருவள்ளுவர் 2 ஆயிரம் வருடங்களுக்கு முன் வேளாண்மை பற்றி விரிவாக விளக்கியுள்ளார். மண் வளம் பாதுகாப்பு பற்றி காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார் என பிரதமர் மோடி கூறினார்.

Similar News