செய்திகள்
எம்.எம். அப்துல்லா, கனிமொழி

தி.மு.க. மாநிலங்களவை எம்.பி.க்களாக எம்.எம். அப்துல்லா, கனிமொழி பதவியேற்பு

Published On 2021-11-29 06:10 GMT   |   Update On 2021-11-29 06:10 GMT
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட எம்.எம். அப்துல்லா, கனிமொழி ஆகியோர் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக இருந்தனர். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு இருவரும் வெற்றி பெற்றார்கள். இதனால் தங்களது மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்தனர். அந்த பதவிக்கு தி.மு.க. சார்பில் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் போட்டியிட்டு, இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019 ஜூலையில் அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட அ. முகமது ஜான் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி காலமானார். இதனால் அவர் வகித்த மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியானது. காலியாக இருந்த மாநிலங்களவை இடத்துக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடன் உள்ள தி.மு.க. சார்பில் எம்.எம். அப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று பாராளுமன்றம் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் எம்.எம். அப்துல்லா, கனிமொழி ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News