செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,919 பேருக்கு தொற்று

Published On 2021-11-18 10:07 IST   |   Update On 2021-11-18 10:07:00 IST
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 470 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,64,623 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:

நாட்டில் மேலும் 11,919 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த 15-ந் தேதி பாதிப்பு 8,865 ஆக இருந்த நிலையில், நேற்று முன்தினம் 10,197 ஆக உயர்ந்தது. இந்நிலையில் பரிசோதனை அதிகரித்ததன் காரணமாக நேற்று சற்று உயர்ந்துள்ளது.

நேற்று அதிகபட்சமாக கேரளாவில் 6,849 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நாடு முழுவதுமான நேற்றைய பாதிப்பில் சுமார் 57 சதவீதம் ஆகும். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 44 லட்சத்து 78 ஆயிரத்து 517 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் 388 பேர் உள்பட நேற்று நாடு முழுவதும் 470 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,64,623 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,242 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 38 லட்சத்து 85 ஆயிரத்து 132 ஆக உயர்ந்தது. தற்போது 1,28,762 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


நாடு முழுவதும் நேற்று 73,44,739 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 114 கோடியே 46 லட்சத்தை கடந்துள்ளது.

நாட்டில் இதுவரை 62.82 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று 12,32,505 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News