செய்திகள்
சிபிஐ

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குனர்களின் பதவிக்காலம் நீட்டிப்பு- அமலுக்கு வந்தது அவசர சட்டம்

Published On 2021-11-14 16:29 GMT   |   Update On 2021-11-14 16:29 GMT
பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
புதுடெல்லி:

அமலாக்கத்துறை, சிபிஐ இயக்குனர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் வரை இருந்ததை, 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து சட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மத்திய ஊழல் தடுப்பு ஆணைய திருத்தச் சட்டம்(2021) என்ற பெயரில் மத்திய அரசு இந்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. வரும் 29-ம் தேதி பாராளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அவசர சட்டத்தின்படி, சிபிஐ அல்லது அமலாக்கத்துறை இயக்குனரை முதலில் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கலாம். தேவைப்பட்டால், பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். ஒவ்வொரு ஆண்டாக மூன்று முறை பதவிக்காலம் நீட்டிக்கப்படவேண்டும்.
Tags:    

Similar News