செய்திகள்
கோப்புப்படம்

அசாம் மருத்துவர்கள் ரூ.100 கோடி வரி ஏய்ப்பு

Published On 2021-01-13 05:06 IST   |   Update On 2021-01-13 05:06:00 IST
அசாம் மருத்துவர்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது வருமான வரித்துறை சோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

அசாமில் உள்ள சில புகழ்பெற்ற மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களை வருமான வரித்துறை சோதனை செய்தது. அப்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி 8-ந் தேதி முதல் கவுகாத்தி, நல்பாரி மற்றும் திப்ருகர் உள்ளிட்ட 29 இடங்களில் இதற்கான தேடுதல் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடந்தன. இந்த தேடலில் ரூ.7.54 கோடி ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இவை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் கணக்குகளில் குறிப்பிடப்படாதவையாகும்.

தங்களின் வருவாயை குறைத்து மதிப்பிட்டு, ரசீது வழங்கி இதுபோன்ற மோசடிகளை செய்துள்ளதாக தெரியவந்தது. இதன்படி அசாம் மருத்துவர்கள், விவரிக்கப்படாத முதலீடு மற்றும் ரசீதுகள் மூலம் ரூ.100 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டுபிடிககப்பட்டுள்ளது என்று மத்திய நேரடி வரி வாரிய அதிகாரிகள் கூறினர்.

Similar News