செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

இந்தியாவில் 5.29 கோடி கொரோனா மாதிரிகள் பரிசோதனை

Published On 2020-09-10 04:42 GMT   |   Update On 2020-09-10 04:42 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 11.29 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 75062 பேர் உயிரிழந்துள்ளனர். 34.71 லட்சம் பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்தவண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 95,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 5.29 கோடியாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 5,29,34,433 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 11, 29,756 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐஎம்சிஆர் தெரிவித்துள்ளது.


Tags:    

Similar News