செய்திகள்
திருப்பதி ஏழுமலையான்

ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து - திருப்பதி தேவஸ்தானம் தகவல்

Published On 2020-09-05 21:33 GMT   |   Update On 2020-09-05 21:33 GMT
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச தரிசன டோக்கன் வழங்குவது ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது
திருப்பதி:

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருவதால் அங்குள்ள அலுவலர்கள், ஊழியர்கள், அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது.

எனவே அலிபிரியில் ஸ்ரீதேவி காம்ப்ளக்சில் தினமும் 3 ஆயிரம் எண்ணிக்கையில் இலவச தரிசன (டைம் ஸ்லாட்) டோக்கன் வழங்கப்பட்டு வந்தது, அது இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 30-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ரூ.300 டிக்கெட் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News