செய்திகள்
பாகிஸ்தான்- இந்தியா

2 இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் பாகிஸ்தான் முயற்சி முறியடிப்பு

Published On 2020-09-03 11:21 IST   |   Update On 2020-09-03 11:21:00 IST
இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் முறியடிக்கப்பட்டது.
புதுடெல்லி:

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கோபிந்த பட்நாயக், அங்காரா அப்பாஜி ஆகிய இரண்டு இந்தியர்களை பயங்கரவாதிகளாக அறிவித்து தடை விதிக்குமாறு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் கோரியது. இந்த முயற்சியானது பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளின் ஆதரவுடன் முறியடிக்கப்பட்டது.

இது தொடர்பாக விவாதித்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், சரியான ஆதாரத்தை பாகிஸ்தான் சமர்ப்பிக்காததால் அந்த நாட்டின் கோரிக்கையை நிராகரித்தது. இந்த விஷயத்தில் பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த உறுப்பு நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ஐநாவுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.

இதேபோன்று இந்தியர்களான வேணு மாதவ் டோங்ரா மற்றும் அஜோய் மிஸ்ட்ரி ஆகியோரை பயங்கரவாதிகளாக முத்திரை குத்த பாகிஸ்தான் அரசு கடந்த ஜூலை மாதம் முயற்சி செய்தது. அந்த திட்டமும் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Similar News