செய்திகள்
அமித்ஷா

சீன ராணுவ தாக்குதலுக்கு பலியான வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்- அமித்ஷா உருக்கம்

Published On 2020-06-18 03:58 GMT   |   Update On 2020-06-18 03:58 GMT
சீன ராணுவ தாக்குதலில் உயிரிழந்த 20 இந்திய வீரர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார்.
புதுடெல்லி:

லடாக்கில் சீன ராணுவ தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் பலியானது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று டுவிட்டரில் பதிவுகளை வெளியிட்டார்.

அவற்றில் அவர் கூறியிருப்பதாவது:-

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் துணிச்சலான வீரர்களை பறிகொடுத்த வேதனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. அவர்களின் உயரிய தியாகத்துக்காக, அவர்களுக்கு நாடு எப்போதும் கடன்பட்டிருக்கும்.

ஒட்டுமொத்த நாடும், மோடி அரசும் இந்த துயரமான நேரத்தில் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்கிறது. காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறது.

இந்திய நிலப்பகுதி பாதுகாப்பாக இருப்பதற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த அந்த மாவீரர்களுக்கு நாடு வணக்கம் செலுத்துகிறது.

அவர்களின் துணிச்சல், இந்தியா தனது நிலப்பகுதி மீது கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அந்த மாவீரர்களை இந்திய ராணுவத்துக்கு அளித்த அவர்களின் குடும்பத்தினருக்கு நான் தலைவணங்குகிறேன்.

இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.
Tags:    

Similar News