செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் 1 கோடி பேர்

Published On 2020-04-22 15:41 IST   |   Update On 2020-04-22 15:41:00 IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் 1 கோடியே 10 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் ஏராளமான மருத்துவ ஊழியர்களும், சார்பு ஊழியர்களும், சமூக பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதாவது டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் என சுகாதாரத்துறையை சேர்ந்த 30 லட்சம் பேர் இதில் பணியாற்றி வருகிறார்கள்.

இத்துடன் அதன் துணை பணிகளில் 80 லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், என்.சி.சி., என்.எஸ்.எஸ். படையினர், சமூக சேவை பணியாளர்கள் இந்த 80 லட்சம் பேரில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மொத்தத்தில் 1 கோடியே 10 லட்சம் பேர் இந்த பணிகளில் இருக்கிறார்கள். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

Similar News