செய்திகள்
வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட மஞ்சு திவாரி

துப்பாக்கியால் சுட்டு சர்ச்சையில் சிக்கிய பாஜக மகளிரணி தலைவி

Published On 2020-04-06 11:24 GMT   |   Update On 2020-04-06 11:24 GMT
பிரதமர் மோடி நேற்றிரவு, விளக்கு ஏற்றச் சொல்லியிருந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் பாஜக மகளிரணி தலைவி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பால்ராம்புர்:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக தேசத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நேற்று இரவு 9 மணிக்கு மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று நாட்டின் பல பகுதிகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.

எனினும், பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலம் பால்ராம்புர் மாவட்டத்தின் பாஜக மகளிரணியைச் சேர்ந்த மஞ்சு திவாரி என்பவர் நேற்றிரவு துப்பாக்கியால் சுட்டு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News