செய்திகள்
காங்கிரஸ்

ஐதராபாத் நிறுவனத்திடம் ரூ.170 கோடி வாங்கியதாக சர்ச்சை - காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரி நோட்டீஸ்

Published On 2019-12-03 20:22 GMT   |   Update On 2019-12-03 20:22 GMT
ஐதராபாத் நிறுவனத்திடம் இருந்து ரூ.170 கோடி பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது
புதுடெல்லி:

உள்கட்டமைப்பு துறையில் ஈடுபடும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கடந்த மாதத்தின் முதல் வாரத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. இதில், பொது உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான நிதியை போலி ரசீதுகள் மூலமும், போலி ஒப்பந்தங்கள் மூலமும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அபகரித்தது தெரிய வந்தது. இந்த திட்டங்கள், தென்னிந்தியாவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பெரிய உள்கட்டமைப்பு திட்டங்களும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான திட்டங்களும் ஆகும்.

ரூ.3 ஆயிரத்து 300 கோடி நிதி அபகரிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஹவாலா பரிமாற்றமும் நடந்துள்ளது.

மேலும், இந்த சோதனையின்போது, ஐதராபாத்தை சேர்ந்த மெகா இன்ப்ராஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் என்ஜினீயரிங் என்ற நிறுவனம், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.170 கோடி கொடுத்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கின. இந்நிலையில், ஐதராபாத் நிறுவனத்திடம் இருந்து ரூ.170 கோடி பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நேற்று நோட்டீஸ் அனுப்பியது.பணம் பெற்றது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மீதான ரூ.3 ஆயிரத்து 300 கோடி ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பான வழக்கின் ஒரு அங்கமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Tags:    

Similar News