செய்திகள்
பொதுமக்களின் உயிர்காக்க எச்சரிக்கை பலகை ஏந்தி நிற்கும் மனிதர்

மும்பை கனமழை - சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலி

Published On 2019-07-02 06:49 IST   |   Update On 2019-07-02 20:38:00 IST
மும்பை தொடர் மழை காரணமாக பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை:

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கின்றன. குறிப்பாக மும்பையில் சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாளங்கள் அனைத்தும்  மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் சாலைகளில் மேலும் மழை நீர் சேர்ந்து ஆறுபோல் காட்சியளித்தது. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  தொடர் மழை காரணமாக மக்கள் பாதிப்படைந்துள்ள நிலையில், வெள்ளத்தில் மிதக்கும் மும்பையில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.    கனமழை காரணமாக மும்பையில், அரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் மஹாராஷ்டிராவில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக பஸ், ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பையின் பிம்பிரிபாடா என்ற பகுதியில் சுவர் இடிந்து விழுந்ததில் 12 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News