செய்திகள்

சாமி தரிசனம் செய்ய கேதார்நாத் செல்கிறார் பிரதமர் மோடி

Published On 2019-05-18 03:55 GMT   |   Update On 2019-05-18 03:55 GMT
சூறாவளி தேர்தல் பிரசாரத்தை முடித்துள்ள பிரதமர் மோடி இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
டேராடூன்:

இமயமலைத் தொடரில் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோவில் அமைந்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள இந்த கோவில், கடல் மட்டத்தில் இருந்து 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரையாக இக்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்கின்றனர். குளிர்காலங்களைத் தவிர மீதமுள்ள 6 மாதங்கள் மட்டும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும்.

அவ்வகையில் குளிர்காலம் முடிவடைந்துள்ள நிலையில், 6 மாதத்திற்குப் பிறகு கடந்த 9-ந்தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.



பிரமதர் மோடி பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நேற்றுடன் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரமும் நிறைவடைந்துள்ளது. பிரசாரம் முடிந்துவிட்டதால் நான் சற்று ஓய்வெடுக்கலாம் என்று பிரதமர் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவர் இன்று கேதார்நாத் சென்று சாமி தரிசனம் செய்ய இருக்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News