செய்திகள்
சொகுசு கார்களில் சிவப்பு விளக்குகளை நீக்கி ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம் - பிரதமர் மோடி பெருமிதம்
பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, சொகுசு கார்களில் சிவப்பு விளக்குகளை நீக்கி ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம் என பெருமிதமாக கூறியுள்ளார். #PMModi #PublicRally
முசாபர்பூர்:
பீகார் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 11 ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் 18,23,29 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 6,12,19 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் முசாபர்பூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
பயங்கரவாதத்தினை உருவாக்கும் அனைவரும் இந்த காவலாளிக்கு எதிராக இருக்கிறார்கள். குற்றங்கள் புரிந்து வழக்குகளுக்காக நீதிமன்றங்களுக்கு சென்று ஜாமீன் கேட்பவர்கள், இந்த உறுதியான அரசினை கண்டு அஞ்சுகின்றனர். எதிர்க்கட்சியினர் அவர்களின் வெற்றிக்காக பாடுபடவில்லை, தங்களின் குறைந்த செல்வாக்கை அதிகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார். #PMModi #PublicRally

விழிப்புடன் இருங்கள். பீகாரில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்தால் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவார்கள், வீட்டை தாண்டினால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது. இருண்ட பின் மக்கள் யாராக இருந்தாலும் வெளியே வர முடியாத சூழல் உருவாகும்.
ஆனால் எங்கள் ஆட்சியில் சொகுசு கார்களில் இருந்த சிவப்பு விளக்குகளை நீக்கி, ஏழைகளின் வீட்டில் விளக்கேற்றி வைத்தோம். பாஜக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளுக்கு வாக்களித்தாலும், அது இந்த மோடிக்கே என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.