செய்திகள்

ம.பி. முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிரடி சோதனை

Published On 2019-04-07 10:17 IST   |   Update On 2019-04-07 10:17:00 IST
மத்தியப்பிரதேச முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
போபால்:

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் கமல்நாத்.

முதல் மந்திரியின் சிறப்பு பணி அதிகாரியாக பிரவீன் காக்கர் என்பவர் இருந்து வருகிறார். இவரது இல்லம் தலைநகர் போபாலில் உள்ள விஜய்நகர் பகுதியில் அமைந்துள்ளது.



இந்நிலையில், டெல்லியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அவரது வீட்டிற்கு இன்று அதிகாலை சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனை தவிர்த்து ஷோரூம் ஒன்றிலும் மற்றும் பிற இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது.

இதேபோல், போபால், இந்தூர், கோவா மற்றும் டெல்லி உள்பட 50க்கு மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். #Kamalnath #ITraid
Tags:    

Similar News