செய்திகள்

தேர்தல் பிரசார மேடை சரிந்தது - அதிர்ஷ்டவசமாக தப்பினார் முன்னாள் முதல்வர்

Published On 2019-03-30 15:13 GMT   |   Update On 2019-03-30 15:13 GMT
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் மேடை சரிந்ததில் முன்னாள் முதல் மந்திரி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். #LSpolls #Gaya #JeetanRamManjhi
பாட்னா:

பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 11ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

இதற்கிடையே, பீகார் மாநிலத்தில் உள்ள கயா தொகுதியில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது. இங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

இந்நிலையில், பீகார் மாநிலம் கயா தொகுதியில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி தலைவருமான ஜித்தன் ராம் மஞ்சி பங்கேற்றார். இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த சுரேந்திர யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொதுக்கூட்டம் நடைபெற்றபோது தொண்டர்கள் சூழ்ந்ததால் மேடையின் ஒரு பகுதி திடீரென சரிந்தது. இதில் ஜித்தன் ராம் மஞ்சி அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். அவரை தொண்டர்கள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

முன்னாள் முதல் மந்திரி பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடை சரிந்தது பீகாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
#LSpolls #Gaya #JeetanRamManjhi
Tags:    

Similar News