செய்திகள்

இரண்டு நாட்களில் 6 மாநிலங்களில் சுற்றுப்பயணம்- பிரதமர் மோடி சூறாவளி பிரசாரம்

Published On 2019-03-27 09:27 GMT   |   Update On 2019-03-27 09:27 GMT
பிரதமர் நரேந்திர மோடி, நாளையும் நாளை மறுதினமும் 6 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். #LokSabhaElections2019 #ModiCampaign
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் பாஜகவின் முக்கிய தலைவர்கள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிரசார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அங்கு மிகப்பெரிய அளவில் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.



இந்நிலையில், பாஜகவுக்கு வலுசேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாளையும் நாளை மறுதினமும் 6 மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரசார பொதுக்கூட்டங்களில் உரையாற்ற உள்ளார்.

நாளை காலை ஜம்மு காஷ்மீரில் பிரசாரத்தை தொடங்கும் மோடி, உத்தரகாண்ட் மற்றும் உ.பியின் மீரட்டில் பிரசாரம் செய்கிறார். மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஒடிசாவின் கோராபுத், தெலுங்கானாவின் மெஹ்புப் நகர், ஆந்திராவின் கர்னூல் ஆகிய இடங்களில் நடைபெறும் பிரமாண்ட பிரசார கூட்டங்களில் உரையாற்ற உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் மீரட் பொதுக்கூட்டத்தில் 8 மக்களவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பேச உள்ளார். இந்த தொகுதிகளில் ஏப்ரல் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. #LokSabhaElections2019 #ModiCampaign
Tags:    

Similar News