செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் நிலச்சரிவு- 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்தன

Published On 2019-03-13 06:30 GMT   |   Update On 2019-03-13 06:30 GMT
ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் 30க்கும் மேற்பட்ட கடைகள் புதைந்தன. #JKLandslide
பாதர்வா:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்தில் உள்ள பாத்ரி சந்தைப்பகுதியில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.  அப்பகுதி மக்கள் பெரும் சத்தம் கேட்டு விழித்தனர். நிலநடுக்கம் என எண்ணி வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். இந்த மீட்புப் பணியில் பல போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என பாதர்வா எஸ்பி ராஜ் சிங் கவுரியா தெரிவித்துள்ளார். மேலும் 14 கட்டிடங்கள் உட்பட 30 கடைகள் நிலச்சரிவில் புதைந்துள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து தற்போது மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #JKLandslide
Tags:    

Similar News