செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து சீறிய ராஜ நாகம்- வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர்

Published On 2019-03-12 09:35 IST   |   Update On 2019-03-12 09:35:00 IST
கர்நாடக மாநிலத்தில் ஒரு வீட்டினுள் புகுந்து, வீட்டில் இருந்தவர்களை உயிர் பயத்தில் ஓடவிட்ட ராஜ நாகத்தை வனத்துறையினர் பிடித்து காட்டில் விட்டனர். #KingCobra
பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டம், மண்டகாடி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினுள் நேற்று கொடிய விஷம் கொண்ட ராஜநாகப் பாம்பு புகுந்துள்ளது. வீட்டிற்குள் இருந்தவர்கள் பாம்பு சீறுவதைப் பார்த்ததும், உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக பதறியடித்து வெளியேறினர். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அனைவரும் அந்த வீட்டின் முன் திரண்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து பாம்பை பிடிக்க முயன்றனர். அவர்களைக் கண்டதும் பாம்பு சீறியது. இருப்பினும் உரிய பாதுகாப்புடன் தைரியமாக சென்று பாம்பை பிடித்த வனத்துறையினர், காட்டிற்குள் கொண்டு விட்டனர்.



பிடிபட்ட ராஜ நாகம் கொடிய விஷத்தன்மை கொண்டது என்றும் இந்த பாம்பை பிடிப்பது கடினமான பணி என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். #KingCobra

Tags:    

Similar News