செய்திகள்

உ.பி. கார்பெட் தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 13 ஆனது

Published On 2019-02-23 17:39 IST   |   Update On 2019-02-23 18:15:00 IST
உத்தரப்பிரதேசத்தின் படோகி மாவட்டத்தில் கார்பெட் தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. #UPExplosion
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் படோகி-வாரணாசி சாலையில் உள்ள ரோதாகன் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் கார்பெட் தயாரிப்பு தொழிற்கூடம் செயல்பட்டு வருகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் பட்டாசு விற்பனையும் செய்து வருகிறார். 

இன்று மதியம் வழக்கம்போல் கார்பெட் தொழிற்கூடத்தில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது, திடீரென வெடிகுண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்துச் சிதறியது. 
 
சிறிது நேரத்தில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. வீட்டில் இருந்தவர்கள், கார்பெட் தொழிற்கூடத்தில் வேலை செய்தவர்கள் என பலர் இடிபாடுகளில்  சிக்கிக்கொண்டனர். நெடுஞ்சாலையில் கட்டிட சிதறல்களும், மனித உடல் பாகங்களும் சிதறிக் கிடந்தன.



தகவலறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடம் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். வெடிவிபத்தில் 4 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், உ.பி.யின் படோகியில் கார்பெட் தயாரிப்பு கூடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். #UPExplosion
Tags:    

Similar News