செய்திகள்

சாகச ஒத்திகையின்போது தரையில் விழுந்த விமானப்படை விமானங்கள்- ஒரு பைலட் பலி

Published On 2019-02-19 09:58 GMT   |   Update On 2019-02-19 09:58 GMT
பெங்களூருவில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரு பைலட் உயிரிழந்தார். #AircraftCrash
பெங்களூரு:

பெங்களூரில் உள்ள எலஹங்கா விமானப்படை தளத்தில் சர்வதேச விமானத் தொழில் கண்காட்சி நாளை தொடங்க உள்ளது.  24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகிறது.

விமானத் தொழில் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிலை ஊக்குவிப்பதற்காக நடத்தப்படும் இந்த கண்காட்சியில், பல்வேறு வகையான விமானங்களின் தொழில்நுட்ப சாகசம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், எலஹங்கா தளத்தில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற சூரிய கிரண் பிரிவைச் சேர்ந்த 2 போர் விமானங்கள் பயிற்சியின்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து தீப்பிடித்தன. இரண்டு விமானங்களும் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதாக தெரிகிறது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் ஒரு பைலட் உயிரிழந்தார். 2 பைலட்டுகள் விமானத்தில் இருந்து வெளியே குதித்ததால் காயங்களுடன் உயிர்தப்பினர். விமானம் விழுந்த பகுதியில், தரையில் நின்றிருந்த ஒருவரும் பலத்த காயமடைந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  #AircraftCrash
Tags:    

Similar News