செய்திகள்

ராஜஸ்தான் முதல் மந்திரிக்கு ஆபரேசன்- விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து

Published On 2019-02-18 10:37 GMT   |   Update On 2019-02-18 10:37 GMT
ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட்டுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #PMModiWishes #RajastanCM #AshokGehlot
மும்பை:

ராஜஸ்தானின் முதல் மந்திரி அசோக் கெலாட்(67), குடல் இறக்க அறுவைச் சிகிச்சைக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு  நேற்று அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘சரியான நேரத்தில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் தற்போது உடல்நிலை தேறி வருகிறேன். விழிப்புணர்வுடன் செயல்படுவதே பன்றிக் காய்ச்சல் உட்பட அனைத்து நோய்களையும் முழுவதுமாக குணப்படுத்தக் கூடியதாகும்.

ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. அனைத்து மக்களும் தங்கள் உடல்நலனை பராமரிப்பதுடன், உரிய நேரத்தில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்’ என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் அறுவைச் சிகிச்சை செய்துள்ள ராஜஸ்தான் முதல்வர், விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று குணமடைந்த செய்தி கேட்டு மிகவும் மகிழ்ந்தேன். மேலும் அசோக் கெலாட் நலமுடன் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். #PMModiWishes #RajastanCM #AshokGehlot
Tags:    

Similar News